பாஜக ஆட்சிக்கு வந்தால் முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச கல்வி... அறிவித்தார் ஜெ.பி.நட்டா!!

Published : Feb 14, 2023, 08:18 PM IST
பாஜக ஆட்சிக்கு வந்தால் முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச கல்வி... அறிவித்தார் ஜெ.பி.நட்டா!!

சுருக்கம்

நாகாலாந்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். 

நாகாலாந்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். வரும் பிப்.24 ஆம் தேதி நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நாகாலாந்தில் பாஜவுடன் கூட்டணியில் உள்ள என்டிபிபி கட்சியின் நெப்யூ ரியோ முதல்வராக உள்ள நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் அங்கு பலமாக உள்ளது.

இதையும் படிங்க: ஏரோ இந்தியா 2023: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதப்படை வீரர்களுக்கான உடை!

எனவே இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. இதனிடையே நாகாலாந்து சென்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு திமாபூர் விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

இதையும் படிங்க: பிரான்ஸ் நாட்டில் இருந்து 250 விமானங்களை வாங்கும் இந்தியா.! பிரதமர் மோடி - அதிபர் இம்மானுவேல் மேக்ரன் பேச்சு !

அதில், நாகாலாந்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும், சிறப்பிடம் பெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தாய், சேய் பராமரிப்புக்காக தனிப்பிரிவு அமைக்கப்படும். மத்திய அரசின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!