பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் ஆகியோர் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதிய ஏர் இந்தியா-ஏர்பஸ் கூட்டாண்மை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த மெகா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குவதாக அறிவித்தார்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை பாராட்டிய பிரதமர் மோடி, இந்தியா-பிரான்ஸ் இடையேயான கூட்டாண்மைக்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான மைல்கல் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த முக்கியமான ஒப்பந்தம், இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ஆழமான உறவுகளையும், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வெற்றிகளை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க..உலகளவில் காற்று மாசுபட்ட நகரங்களில் இடம்பிடித்த டெல்லி - மற்ற இந்திய நகரங்கள் எப்படி.? முழு விபரம் உள்ளே!!
அடுத்து பேசிய டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ஏர்பஸ் நிறுவனத்துடன் நாங்கள் மிகவும் நல்ல உறவை உருவாக்கி இருக்கிறோம். இன்று, ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதையடுத்து பேசினார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன். அப்போது பேசிய அவர், இந்தியாவுடன் புதிய தளங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்க பிரான்சின் விமான நிறுவனங்கள் காட்டும் ஆர்வத்தையே, ஏர்இந்தியா - ஏர்பஸ் ஒப்பந்தம் வெளிப்படுத்துவதாகக் கூறினார். இந்தியர்கள் அதிக அளவில் பிரான்சுக்கு வருகை தர வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க..விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.? சீமான் என்ன சொன்னார் தெரியுமா.!