முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் உறைந்த தொண்டர்கள்..!

By vinoth kumarFirst Published Jul 28, 2019, 11:53 AM IST
Highlights

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி (77) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி (77) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜெய்பால் ரெட்டி, ஐதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஜெயபால் ரெட்டி காலமானார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 

கடந்த 1942-ம் ஆண்டு பிறந்த இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்துள்ளார். இதன்பின் அரசியலில் நுழைந்து 1970-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். 

ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவியையும் வகித்து வந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிது காலம் ஜனதா கட்சியிலும், ஜனதா தளத்திலும் இருந்துள்ளார். பின்னர் காங்கிரசில் இணைந்தார். 4 முறை மக்களவை எம்.பி.,யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!