Raghuram Rajan Bharat Jodo Yatra: ராகுலுடன் கைகோர்த்த ரகுராம் ராஜன்!பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று நடந்தார்

By Pothy RajFirst Published Dec 14, 2022, 10:52 AM IST
Highlights

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் சேர்ந்து இன்று நடந்தார்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் சேர்ந்து இன்று நடந்தார்

ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத் ஜோடோ நடைபயணத்தை நடத்தி  வருகிறார். இந்தப் பயணத்தில் ரகுராம் ராஜனும் ராகுல் காந்தி, சச்சின் பைலட் ஆகியோருடன் இணைந்தார். 

பாரத் ஜோடோ நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் இணைந்தார்

ராஜஸ்தானில் உள்ள சவாய் மதோபூரில் உள்ள படோடி பகுதியில் இருந்து ராகுல் காந்தி இன்று நடைபயணத்தைத் தொடங்கினார். அவருடன் ரகுராம் ராஜனும் இணைந்து கொண்டார். ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று 10-வது நாளாகத் தொடர்கிறது.

 

में जी के साथ कदम मिलाते RBI के पूर्व गवर्नर श्री रघुराम राजन...

नफ़रत के खिलाफ देश जोड़ने के लिए खड़े होने वालों की बढ़ती संख्या बताती है कि- हम होंगे कामयाब। pic.twitter.com/MFV6izCpcw

— Congress (@INCIndia)

இன்று காலை நடைபயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தி, தசுவா மாவட்டத்தில் உள்ள பக்டி கிராமத்தில் காலை முடிக்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை நடைபயணத்தை ராகுல் காந்தி தொடர்கிறார். 
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வரும் 16ம்தேதியுடன் 100 நாட்களை நிறைவடைய உள்ளது.

இதையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெய்பூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில் பாடகர் சுனிதி சவுகான் பங்கேற்று பாடல்களைப் பாடஉள்ளார். 

கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத்ஜோடோ நடைபயணம் இதுவரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைக் கடந்து ராஜஸ்தானில் உள்ளது. ராஜஸ்தானில் 17 நாட்கள் பயணிக்கும் ராகுல்காந்தி 500 கிமீ நடக்க உள்ளார். 

சீனாவிடமிருந்து ரூ.1.35 கோடி நன்கொடை பெற்ற ராஜீவ்காந்தி அறக்கட்டளை: காங்கிரஸை கடுப்பேற்றிய அமித் ஷா

அடுத்ததாக ராஜஸ்தானில் நடைபயணத்தை முடித்து, பஞ்சாப், ஹரியானா வழியாக ராகுல் காந்தி டெல்லி சென்று, அங்கிருந்து ஜம்மு காஷ்மீரில் முடிக்க உள்ளார். 150 நாட்கள் பயணிக்கும் ராகுல் காந்தி, 3 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோ மீட்டர் தொலைவை நடக்க உள்ளார்.


 

click me!