சீக்கியர்களுக்கு பிரதமர் நிறைய செய்து இருக்கிறார்: காலிஸ்தான் முன்னாள் தலைவர் ஜஸ்வந்த் சிங் திகேதர் புகழாரம்!

By Dhanalakshmi GFirst Published Mar 17, 2023, 11:46 AM IST
Highlights

சீக்கிய சமுதாயத்தினருக்கு பிரதமர் மோடி அதிகளவில் செய்து இருக்கிறார் என்று தல் கல்சா நிறுவனரும், காலிஸ்தான் முன்னாள் தலைவருமான ஜஸ்வந்த் சிங் திகேதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜஸ்வந்த் சிங் திகேதர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ''சீக்கிய சமுதாய மக்களை பிரதமர் போற்றுகிறார். அவர்களுக்காக அதிகமாக நல்ல விஷயங்களை செய்து இருக்கிறார். எங்களது சமுதாயத்தை நேசிக்கிறார். கர்தார்பூர் சாலை திறந்து வைத்தார். குரு கோபிந்த் சிங்கின் மகன் சோட்டி சாஹிப்சதாஸ் குறித்து பேசி இருக்கிறார். சீக்கிய சமுதாயத்தினரால் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 

நாங்கள் வைத்த பெரிய கோரிக்கைகளில் சிலவற்றை மத்திய அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. இன்னும் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர். அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் நன்றாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி சீக்கிய சமுதாயத்தில் இருக்கும் முக்கிய தலைவர்களை லோக் கல்யாண் மார்க்கில் இருக்கும் தனது இல்லத்தில் சந்தித்து இருந்தார். அப்போது சீக்கிய சமுதாய மக்களுக்கு ஆற்றி வரும் நலப்பணிகள் மற்றும் முக்கியமாக டிசம்பர் 6ஆம் தேதியை வீர் பால் திவாஸ் தினமாக அறிவித்து இருந்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தனர். அப்போது பிரதமருக்கு சீக்கியர்களுக்கே உரிய கத்தி மற்றும் ''சால்'' வழங்கி கவுரவித்து இருந்தனர். 

ரூ.70,500 கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல்.. மத்திய அரசு அனுமதி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும்  மக்களுக்கு சார் சாஹிப்சாடே என்ன தியாகங்கள் செய்து இருக்கிறார் என்பது பற்றி தெரியாது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், பள்ளி மாணவர்களுடன் உரையாடல் செய்யும்போது அவர் குறித்து எடுத்துரைப்பேன் என்று பிரதமர் அப்போது தெரிவித்து இருந்தார். மேலும், தனது வீட்டிற்கு சீக்கிய தலைவர்கள் வந்ததற்கு நன்றி என்றும், எப்போதும் அவர்களுக்காக வீட்டின் கதவுகள் திறந்து இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். 

டிசிஎஸ் நிறுவன சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் திடீர் ராஜினாமா... அடுத்த சிஇஓ இவர்தானாம்!!

click me!