வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்....எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் அறிக்கை!

Published : Aug 16, 2018, 11:34 AM ISTUpdated : Sep 09, 2018, 08:03 PM IST
வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்....எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் அறிக்கை!

சுருக்கம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது என எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிர்காக்கும் கருவிகள் மூலம் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது என எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிர்காக்கும் கருவிகள் மூலம் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 93 வயதாகும் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வில் இருந்து வருகிறார். 

இந்நிலையில் திடீர் உடல்நிலைக் குறைவு காரணமாக ஜூலை 11-ம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் வாஜ்பாய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரது உடல் நிலை குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர், அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இந்நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் மூலம் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தாய் தந்தையைக் கொன்று ரம்பத்தால் துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்!
இந்தியாவுக்கு எதிராக சதி... ஒரே அடியில் பாடம் கற்றுக்கொடுக்கணும்..! யூனுஸ் அரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய ஐந்து நடவடிக்கைகள்..!