
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி, டெல்லி எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். பாஜகவின் சிஆர்பில் கிழக்கு டெல்லியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு ஈமெயில் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து இமெயில் மூலம் நேற்று கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.உடனே டெல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.இதனால் கம்பீர் வீட்டுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில் ’ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பெயரில் காஷ்மீரில் ஏதேனும் பயங்கரவாத அமைப்பு உருவெடுத்து வருகிறதா? என்பது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், 'ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பெயரில் அனுப்பப்பட்ட இந்த இமெயில் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரபல கிரிக்கெட் வீரருக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.