முதற்கட்ட வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தில் 79.79% மற்றும் அசாமில் 72.14% வாக்குகள் பதிவு

By karthikeyan VFirst Published Mar 27, 2021, 7:38 PM IST
Highlights

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கத்தில் 79.79% வாக்குகளும், அசாமில் 72.14% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
 

294 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்திற்கு 3 கட்டங்களாகவும் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது.

பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள் மற்றும் அசாமில் 47 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முதற்கட்டமாக இன்று நடந்தது.

இன்று காலை முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவிட்டனர். முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மேற்கு வங்கத்தில் 79.79% வாக்குகளும், அசாமில் 72.14% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பாஜக சார்பில் சுவேந்து அதிகாரியும் நேருக்கு நேர் மோதும் நந்திகிராம் தொகுதியில் 2ம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
 

click me!