
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
கோயிலில் இருந்து 25 மீட்டர் தொலைவில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதில் இருவர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.