மத ரீதியாக நாட்டை பிளக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் குற்றச்சாட்டு

 
Published : Feb 25, 2017, 08:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
மத ரீதியாக நாட்டை பிளக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது  கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் குற்றச்சாட்டு

சுருக்கம்

மத ரீதியாக நாட்டை பிளக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது

கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் குற்றச்சாட்டு

நாட்டை மதரீதியாக பிளக்க வலது சாரி இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது என்று  கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.

எதிர்ப்பு

கர்நாடக மாநிலம் மங்களூருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமூக நல் இணக்க பேரணி நேற்று நடந்தது.

இந்த பேரணியில் கலந்து கொண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

இந்த போராட்டத்தில் பினராயிவிஜயன் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நேற்றுஹர்தால் நடத்த அழைப்பு விடுத்து இருந்தது.

ஆனால், அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.

இருப்பினும்  முதல்வர் பினராயி விஜயன் பேரணியில் கலந்து கொண்டார்.

அந்த பேரணியில் அவர் பேசியதாவது-

தொல்லைகள்

இந்த நாட்டின் அமைதியை குலைக்க சில மதரீதியான வலது சாரி அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்த கூட்டத்துக்கு மட்டும் அல்லாமல்,போபாலில் நடந்த கூட்டத்திலும் என்னை பங்கேற்க விடாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எனக்கு தொல்லைகள் கொடுத்தது.

தடுக்கமுடியாது

நான் தலச்சேரி பெர்னான் கல்லூரியில் படிக்கும்போது கத்தியுடன் அலையும் ஆர்.எஸ்.எஸ். நபர்கள் மத்தியில் நான்  நடந்து சென்று இருக்கிறேன். யாரும் என்னைத் தொட்டது கூட கிடையாது. 

போபாலில் நடந்த கூட்டத்தில் நான் கலந்து கொள்ள முயன்றபோது, அங்குள்ள முதல்வர் என்னை வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால், நான் பங்கேற்கவில்லை.நான் முதல்வராக இல்லாவிட்டால் ஒருவரும் என்னை தடுத்து இருக்க முடியாது.

 

சர்வாதிகாரம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாறு, ஹிட்லர், முசோலினியின் சித்தாந்தங்களை அடிப்படையாக் கொண்டது.

இந்த இரு சர்வாதிகாரிகளும் உலகை அச்சுறுத்தியவர்கள். ஹிட்லர் யூதர்களையும், கம்யூனிஸ்ட்களையும் அழித்தார்.

ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மையினர்களையும், கம்யூனிஸ்ட்களையும் எதிர்க்கிறது.

பங்கு இல்லை

நாட்டின் சுதந்திரப்போராட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எந்தவித பங்களிப்பும் கிடையாது.

மற்ற கட்சிகள் எல்லாம் தங்கள் வேறுபாடுகளை மறந்து, ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய நேரத்தில், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. மக்களை மதரீதியாக பிளந்து, பிரித்து வைப்பதில்தான் அந்த அமைப்பு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

காந்தி கொலை

மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த நாதூராம் கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தர். அப்போது ஆர்.எஸ்.எஸ் கையில் துப்பாக்கிதான் இருந்தது.

மங்களுருவில் இந்த கூட்டம் சிறப்பாக நடத்த உதவிய காங்கிரஸ் கட்சிக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கட்டிடம் திறப்புவிழா..

கன்னட மொழியில் வெளிவரும் வர்தா பாரதி நாளேட்டின் கட்டிடத்தை முதல்வர்பினராயி திறந்துவைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “ வர்தா பாரதி மதச்சார்பற்ற சிந்தனைகளையும் தாங்கி, மதரீதியான அமைப்புகளை எதிர்த்து போராட வேண்டும்.

சமூகத்தில் ஏழைகள், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்'' என்றார்.

 

 

PREV
click me!

Recommended Stories

திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!
பிரதமர் மோடியின் அடுத்த டூர்! ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம்!