ஹோட்டலில் திடீர் தீ விபத்து - 6 பேர் பலி

Asianet News Tamil  
Published : Dec 21, 2016, 05:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
ஹோட்டலில் திடீர் தீ விபத்து - 6 பேர் பலி

சுருக்கம்

மஹாராஷ்ட்டிர மாநிலம் Gondia நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 6 பேர் உடல் கருகி பலியாகினர். 

Gondia நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து நேரிட்டது. அப்போது, உணவு விடுதியில் உணவருந்திக்‍ கொண்டிருந்த பலர் அலறியடித்து வெளியே ஓடினர்.

இருப்பினும், 6 பேர் பலத்த தீக்‍ காயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும், 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்‍கும் பணியில் ஈடுபட்டன. தீ விபத்துக்‍கான காரணம் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக இவ்விபத்து நேரிட்டிருக்‍கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்‍கின்றன. 

PREV
click me!

Recommended Stories

Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு - என்ன நடக்கிறது கேரளாவில்? முழு விவரம்
Wayanad Landslide : நொடிப்பொழுதில் சரிந்த மலை...4 பேர் பலி! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!