ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?

Asianet News Tamil  
Published : Dec 21, 2016, 05:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?

சுருக்கம்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது பிரதமர் மோடி அறிவித்த 50 நாட்கள், அதாவது, இம்மாதம் 30-ந்தேதி முடிந்தவுடன், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து மக்கள் ஏ.டி.எம்.களில் நாள்தோறும் ரூ. 2ஆயிரம் வரையிலும், வங்கிகளில் வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம் வரையிலும் எடுக்கவும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. ஆனால், ஏ.டி.எம்.களிலும், வங்கிகளிலும் போதுமான பணம் இல்லாததால், மக்கள் பணம் கிடைக்காமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

 டெல்லியில் மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் சந்தோஷ் கங்வார் நிருபர்களைச் சந்தித்த போது, டிச.30ந்தேதிக்கு பின், ஏ.டி.எம்.களில்பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், “ நிச்சயமாக, டிசம்பர் 30-ந்தேதிக்கு பின், ஏ.டி.எம்.களில் இருந்து மக்கள் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அ ரசு எடுத்து வருகிறது. இந்த 50 நாட்கள் என்பது தற்காலிகமானது தான். இது குறித்து அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது'' எனத் தெரிவித்தார்.

ஆனால், கடந்த 16-ந்தேதி நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா அளித்தபேட்டியில், “ டிசம்பர் 30-ந்தேதிக்குப்பின், ஏ.டி.எம்.கள், வங்கிகளில்இருந்து மக்கள் பணம் எடுக்கும்கட்டுப்பாடுகள் நீக்குவது குறித்து, 30-ந்தேதிக்கு பின் பரிசீலிக்கப்படும் இப்போது கூற முடியாது'' எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV
click me!

Recommended Stories

Free Scooty for College Students: கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி..! அரசு அதிரடி அறிவிப்பு..
Shortest Train Journey: 7 நிமிஷத்துல ஸ்டேஷன்! இந்தியாவின் குட்டியான ரயில் பயணம் இதுதான்!