டெல்லி நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ !! 9 பேர் தீயில் கருகி பலி !!

Published : Feb 12, 2019, 08:37 AM IST
டெல்லி நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ !! 9  பேர் தீயில் கருகி பலி !!

சுருக்கம்

டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஒட்டலில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 26 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில், அறைகளில் தூங்கி கொண்டிருந்த 9 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் 3 பேரை காணவில்லை என போலீசார் கூறியுள்ளனர். 

மின்கசிவே தீவிபத்திற்கான காரணம்  என கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?
இன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!