அரசு அலுவலக முக்கிய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து... முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...!

Published : Mar 06, 2019, 11:13 AM IST
அரசு அலுவலக முக்கிய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து... முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...!

சுருக்கம்

டெல்லியில் சிஜிஓ காம்பளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள மத்திய அமைச்சக அலுவலகங்கள் இருக்கும் முக்கிய கட்டிடம் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

டெல்லி சி.ஜி.ஓ. வளாகத்தில் உள்ள தீன் தயாள் அந்தியோதயா பவன் என்ற 11 மாடிக்கட்டிடத்தில் சமூக நீதி அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத் திறனாளிகள் நல அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாறுபாட்டு அமைச்சகங்களின் அலுவலகங்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை அலுவலகம் உட்பட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மேலும் பல குடியிருப்புகளும் உள்ளன. 

இந்த கட்டிடத்தின் 5-வது மாடியில் உள்ள சமூக நீதித் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது. இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

உடனே 24 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!