நான்கு வழி சாலையின் தந்தை "வாஜ்பாய்"...! மாமன்னர் அசோகருக்கு இணையான சிறந்த பிரதமரை இழந்தது இந்தியா..!

By thenmozhi gFirst Published Aug 16, 2018, 6:36 PM IST
Highlights

இந்தியாவின் முதுகெலும்பாய் உள்ள நான்கு வழி சாலை திட்டத்தை துவங்கி வெற்றிகரமாக்கிய பெருமை அடல் பிகாரி வாஜ்பாயையே சேரும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. 

நான்கு வழி சாலையின் தந்தை வாஜ்பாய்...! மாமன்னர் அசோகருக்கு இணையானவர்..!

இந்தியாவின் முதுகெலும்பாய் உள்ள நான்கு வழி சாலை திட்டத்தை துவங்கி வெற்றிகரமாக்கிய பெருமை அடல் பிகாரி வாஜ்பாயையே சாரும்

தங்க நாற்கர திட்டம்

1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "தங்க நாற்கர திட்டம்" டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை இந்த நான்கு முக்கிய மாநகரங்களை இணைப்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டது. இந்த நான்கு  முக்கிய நகரங்களும், வெவ்வேறு திசையில் அமைந்து உள்ளது. அதன்படி, வடக்கே - டெல்லி, தெற்கே - சென்னை, கிழக்கே- கொல்கத்தா மேற்கே - மும்பை என இருக்கும் இந்த நன்கு நகரங்களை இணைக்கும்  பொருட்டு இதற்கு தங்க நாற்கர சாலை என பெயரிடப்பட்டு இருந்தது.

12 (2001- 2012 )ஆண்டுகளாக இரவு பகல் பாரமால் இந்த திட்டத்திற்கான முழு ஆதரவையும் கொடுத்து  பக்காவா முடித்து வெற்றி அடைய செய்தவர் அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களே.

நெடுஞ்சாலை வருவதற்கு முன்பாக டெல்லியிலிருந்து சென்னை வருவதற்கு ஒரு வாரத்திற்கும் மேலாகி திரும்ப டெல்லி சென்றடைய ஒரு மாதம் ஆகி விடும்..ஆனால் இன்றோ இரண்டே நாளில் டெல்லியிலிருந்து, லாரி மூலம் சென்னை வர முடிகிறது

அதுமட்டுமா....எத்தனையோ விபத்துக்கள் ஏற்பட்டது....எரிபொருள் அதிகமாக பயன்படுத்தப்பட்டது..சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கிய காலம் அது...இதற்கெலாம் ஒரு விடிவுகாலமாக அமைந்தது தான்..தங்க நாற்கர திட்ட்டம். இந்தியாவின் முதுகெலும்பாய் உள்ள சாலைகள் தான் இன்றைக்கு ஒட்டு மொத்த மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


 அமைச்சர் பிசி கந்தூரி அவர்களை, இந்த திட்டத்திற்காக மட்டும் பொறுப்பில் அமர்த்தப்பட்டு மிக சிறப்பாக  இந்த திட்டம் வெற்றி அடைய செய்தவர் வாஜ்பாய் அவர்களே..இதுநாள் வரை 14 பிரதமர்கள் இந்த நாட்டை ஆண்டாலும் வாஜ்பாய் போன்றதொரு பிரதமர் மீண்டும் இந்தியாவிற்கு கிடைக்கப்பெறுவாரா என்பது அனைவரின் ஏக்கமே...

காரணம், எந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், பெரும் தலைவர்களாக இருந்தாலும் பல திட்டங்களை  தொடங்கி வைத்தாலும், அதில் எத்தனை திட்டங்கள் முழுமையடைய செய்கின்றனர்...? அதனால் மக்கள்  பணம் வீணாக செல்கிறதே தவிர, நாட்டிற்கு உருப்படியான விஷயம் செய்ய இப்படி ஒரு பிரதமர் மட்டுமே இருந்தார் என்றே கூறலாம்.

மரத்தை நட்டார் அசோகர்..:

தலைமுறை தலைமுறையாக அசோகர் மரத்தை நட்டார் என்று தான் நாம் படித்து இருப்போம். இதனால் வரை மரத்தை நட்டது யார் என்றால் சின்ன பிள்ளைகள் கூட சொல்லும் அசோகர் என்ற பெயரை. அந்த வகையில் காலத்தால் அழியாத யாராலும் மாற்ற முடியாத மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து உள்ள அசோகருக்கு இணையானவர் தான் பிரதமர் வாஜ்பாய். காரணம், நாம்  அசோகரை பார்த்தோமோ இல்லையோ...ஆனால் தலை சிறந்த பிரதமரான வாஜ்பாயை பார்த்து உள்ளோம் அவரது ஆட்சியை பார்த்து உள்ளோம்..அவரது மாபெரும் வெற்றி திட்டமான தங்க நாற்கர திட்டத்தின் பயன்களை அடைந்து வருகிறோம்...அசோகர் எப்படி மரம் நட்டார் என்று இன்று வரை வெற்றி வரலாறு உள்ளதோ..அதே போன்று, இந்தியாவின் முதுகெலும்பாய் இருக்கும் நான்கு வழிசாலை  என்றாலே அந்த பெருமை ..இந்த உலகம் இருக்கும் வரை பிரதமர் வாஜ்பாய் அவர்களையே சாரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

வாஜ்பாய் அவர்கள் செய்த பல நல்ல காரியங்களில் மனதில் முதலில் வந்து நிற்பது தங்க நாற்கர திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நாட்டை ஆள இனி எத்தனையோ  பிரதமர் வந்தாலும், இனி வாஜ்பாய் போன்ற ஒரு பிரதமர் வருவாரா என்பது காலம் தான் பதில் சொல்லும்.

இந்தியாவின் முதுகெலும்பு... நான்கு வழி சாலை தான்....அந்த பெருமைக்கு சொந்தக் காரர் வாஜ்பாய் தான் ....! 
 

click me!