பழிவாங்கும் ஜெகன் மோகன்... சந்திரபாபு நாயுடுவுக்கு புதிய வீடுகட்டிக் கொடுக்க வெடித்துக் கிளம்பிய விவசாயிகள்..!

By Thiraviaraj RMFirst Published Jun 29, 2019, 5:46 PM IST
Highlights

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமராவதி நகரில் வீடு கட்ட நிலத்தை தாங்களே தருவதாக அம்மாநில விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமராவதி நகரில் வீடு கட்ட நிலத்தை தாங்களே தருவதாக அம்மாநில விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி அதனை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டடத்தையும் அவரது வீட்டையும் இடித்து தள்ளியது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் வீட்டை காலி செய்யுமாறு ஆந்திர மாநில மண்டல பிராந்திய வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் ’கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து 100 மீட்டருக்குள் கட்டிடங்கள் கட்டுவது சட்டவிரோதம்; எனக்கூறி உள்ளது. எனவே, அப்படி சுற்றுச்சூழல் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டிருக்கும் 28 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளில் சந்திரபாபு நாயுடுவின் வீடு கிருஷ்ணா ஆற்றை ஒட்டி கட்டப்பட்டு உள்ளது. இது விதிமுறைகளை மீறிய செயல் என கூறி அதனை இடிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு உத்தரவிட்டு நோட்டீசு ஒன்றையும் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில், சந்திரபாபுவை அவரது வீட்டில் முன்னாள் எம்.எல்.ஏ.வான டி.சரவணகுமார் தலைமையில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் சந்தித்து பேசினர். அப்போது ‘தலைநகர் அமராவதி பகுதியில் உள்ள கிராமங்களில் வீடு கட்டுவதற்கான தேவையான நிலம் அளிக்க தயாராக இருக்கிறோம்.

 

தலைநகர் அமராவதி அமைய 33 ஆயிரம் ஏக்கர்கள் நிலம் அளித்துள்ளோம்.  ஒரு வீடு கட்ட 10 ஆயிரம் 3 அடி அளவுக்கு நிலம் அளிக்க எங்களால் முடியாதா? எங்களது கிராமத்தில் நாயுடுவுக்கு வீடு கட்டுவதற்கான செலவை ஏற்கவும் தயார். தலைநகர் பகுதியில் எந்த கிராமத்தில் வசிக்க விரும்புகிறீர்கள் என்பதனை நீங்கள் முடிவு செய்யுங்கள்.  எங்களது நிதியை கொண்டு உங்களுக்காக வீடு ஒன்றை நாங்கள் கட்டுகிறோம்’’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

click me!