ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்... கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்..!

By Thiraviaraj RMFirst Published Apr 3, 2020, 11:59 AM IST
Highlights

சத்தீஸ்காரில் ஒரு தம்பதியினருக்கு பிறந்த இரட்டை குழந்ததைகளுக்கு‘கொரோனா’மற்றும் ‘கோவிட்’என்று பெயர் சூட்டியுள்ளனர். 

சத்தீஸ்காரில் ஒரு தம்பதியினருக்கு பிறந்த இரட்டை குழந்ததைகளுக்கு‘கொரோனா’மற்றும் ‘கோவிட்’என்று பெயர் சூட்டியுள்ளனர். 

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் சமீபத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா என பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில் சத்தீஸ்காரில் ஒரு தம்பதியினருக்கு பிறந்த இரட்டை குழந்ததைகளுக்கு ‘கொரோனா’மற்றும் ‘கோவிட்’என்று பெயர் சூட்டியுள்ளனர். 

இருப்பினும், தம்பதியினர் பின்னர் தங்கள் முடிவை மாற்றி தங்கள் குழந்தைகளுக்கு மறு பெயரிடலாம் என்று கூறினர். இந்த இரண்டு சொற்களும் மற்றவர்களின் மனதில் அச்சத்தையும் பேரழிவையும் உருவாக்ககூடும். ஆனால் ராய்ப்பூர் தம்பதியினர் தங்கள்  இரட்டை குழந்தைகளுக்கு  - ஒரு பையனும் ஒரு பெண்ணும் - கஷ்டங்களை வென்றெடுப்பதை அடையாளப்படுத்தும் வகையில் கொரோனா- கோவிட் என பெயரிட்டு உள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகளின் தாயார் ப்ரீத்தி வர்மா,’மார்ச் 27 அதிகாலையில் நான் இரட்டையர்கள், ஒரு பையன் மற்றும் ஒரு பெண்ணை பெற்றேடுத்தேன். நாங்கள் அவர்களுக்கு இப்போது கோவிட் (பையன்) மற்றும் கொரோனா (பெண்) என்று பெயரிட்டுள்ளோம்.

"பல சிரமங்களை எதிர்கொண்ட பிறகு பிரசவம் நடந்தது, எனவே, நானும் என் கணவரும் அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற விரும்பினோம். அதனால் இந்த பெயர்களை வைத்தோம். தொற்றுநோய் மக்களை சுகாதாரம், மற்றும் பிற நல்ல பழக்கங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.ஆகையால் இருவருக்கும் வேறு பெயரை சூட்ட முடிவிடுத்துள்ளோம்’’ என அவர் கூறினார். 

click me!