ராஜ்ய சபாவுக்கு வந்த மன்மோகன் சிங்... பாராட்டும் ஆம் ஆத்மி... வெட்கக்கேடு என விமர்சிக்கும் பாஜக!

Published : Aug 08, 2023, 11:44 AM ISTUpdated : Aug 08, 2023, 11:51 AM IST
ராஜ்ய சபாவுக்கு வந்த மன்மோகன் சிங்... பாராட்டும் ஆம் ஆத்மி... வெட்கக்கேடு என விமர்சிக்கும் பாஜக!

சுருக்கம்

பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வராமலே தட்டிக்கழித்து வருவதை மறைமுகமாகச் சாடும் வகையில், "உங்கள் எஜமானரை ஓடி ஒளிந்துகொள்ளாமல் இருப்பதற்கு கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்" என்று சுப்ரியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் மசோதா மீதான முக்கியமான விவாதத்தை முன்னிட்டு திங்கட்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் மாநிலங்களவைக்கு வந்திருந்தார்.

90 வயதான காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் டெல்லி மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவும் விவாதத்தில் பங்கெடுக்கவும் வருகை தந்ததற்கு, ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சதா ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.

“இன்று, ராஜ்யசபாவில், டாக்டர் மன்மோகன் சிங் நேர்மையின் கலங்கரை விளக்கமாக நின்றார். கருப்புச் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வந்தார். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. அவர் அளித்த விலைமதிப்பற்ற ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என ராகவ் சதா பதிவிட்டுள்ளார்.

நிலவுக்கு 100 கி.மீ. தொலைவில் சந்திரயான்-3... இஸ்ரோவுக்கு இனிதான் பெரிய சவால் காத்திருக்கு!

ஆனால், மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் வருகையை முன்வைத்து சமூக ஊடகங்களில் பாஜக - காங்கிரஸ் இடையே வாக்குவாதம் தொடங்கி இருக்கிறது.

பா.ஜ.க இந்தியில் வெளியிட்ட பதிவில், “காங்கிரஸின் இந்த பைத்தியக்காரத்தனத்தை நாடு நினைவில் கொள்ளும்! இவ்வளவு மோசமான உடல்நிலையிலும்கூட, காங்கிரஸ் ஒரு முன்னாள் பிரதமரை நாடாளுமன்றத்தில் சக்கர நாற்காலியில் அமர வைத்து வரவழைத்துள்ளது. இது மிகவும் வெட்கக்கேடானது!” என்று குறிப்பிட்டது.

இதற்கு காங்கிரஸ் சமூக ஊடகங்களில் பதில் அளித்தது. அக்கட்சியின் ஐடி பிரிவு தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், “டாக்டர் சாஹாப்பின் (மன்மோகன் சிங்) ஜனநாயகத்திற்கான இந்த அர்ப்பணிப்பு இந்த நாட்டின் அரசியலமைப்பின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜக தனது கட்சியில் மூத்தவர்களை மனதளவில் கோமா நிலைக்குத் தள்ளியிருப்பதாவும், காங்கிரஸில் மூத்த தலைவர்கள் உத்வேகமாகவும் தைரியமாகவும் இருக்கிறார்கள். என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரோ முதல் கோவிட்-19 வரை! சுதந்திர இந்தியாவின் வியக்க வைக்கும் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள்

மேலும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வராமலே தட்டிக்கழித்து வருவதை மறைமுகமாகச் சாடும் வகையில், "உங்கள் எஜமானரை ஓடி ஒளிந்துகொள்ளாமல் இருப்பதற்கு கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்" என்றும் சுப்ரியா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நடைபெற்ற டெல்லி மசோதா மீதான வாக்கெடுப்பில் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. இந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 131 பேரும் எதிராக 102 பேரும் வாக்களித்தனர்.

பெப்பர்ப்ரை இணை நிறுவனர் அம்பரீஷ் மூர்த்தி மாரடைப்பால் காலமானார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!