சிறிய வடகிழக்கு மாநிலமான மிசோரம் 40 தொகுதிகளைக் கொண்டது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 21 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாகின்றன. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்த வந்த உடனே நடத்தப்படும் கருத்துக்கணிப்பு ஆகும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை மதிப்பிடுவதற்கு எக்ஸிட்போல் முடிவுகள் முக்கியக் கருவியாகக் கருதப்படுகிறது.
சிறிய வடகிழக்கு மாநிலமான மிசோரம் 40 தொகுதிகளைக் கொண்டது. இந்த மாநிலத்தில் மாநிலக் கட்சிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. சொராம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சியைத் தக்கவைக்கப் பார்க்கிறது. அதற்கு மற்றொரு மாநிலக் கட்சியான சோரம் மக்கள் இயக்கம் கடும் போட்டியாக உள்ளது. பெரும்பான்மைக்கு 21 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம்.
சி-வோட்டர் கணிப்பு:
மிசோ தேசிய முன்னணி 15-21
சோரம் மக்கள் இயக்கம் 12-18
காங்கிரஸ் 2-8
பாஜக 0
சி.என்.எக்ஸ் கணிப்பு:
மிசோ தேசிய முன்னணி 14-18
சோரம் மக்கள் இயக்கம் 12-16
காங்கிரஸ் 8-10
பாஜக 0-2
ஜன் கி பாத் கணிப்பு:
மிசோ தேசிய முன்னணி 10-14
சோரம் மக்கள் இயக்கம் 15-25
காங்கிரஸ் 5-9
பாஜக 0-2
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்
ஐந்து சட்டமன்றத் தேர்தல்களுக்கும் டிசம்பர் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முன்னதாக ஐந்து மாநிலங்களிலும் நவம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம்தேதி தேர்தல் நடந்தது. மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்தத் தேர்தல்கள் நடப்பதால், இந்தத் தேர்தல்கள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன.