சட்ட செயல்முறையில் பாரபட்சம் காட்டக்கூடாது: புல்டோர் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Published : Nov 13, 2024, 11:12 AM ISTUpdated : Nov 13, 2024, 03:03 PM IST
சட்ட செயல்முறையில் பாரபட்சம் காட்டக்கூடாது: புல்டோர் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சுருக்கம்

புல்டோர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமற்றம் கூறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை இடிப்பதற்காக மாநில அரசுகள் புல்டோசர் நடவடிக்கைகள் எடுப்பதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பை அறிவித்துள்ளது. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளில் இருந்து தனிநபர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் புல்டோர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமற்றம் கூறியுள்ளது.

புல்டோசர்களை கொண்டு கட்டடங்களை இடிப்பதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. அதிகார வர்க்கம் நீதிமன்றத்தின் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

குற்றம் தொடர்பாக நீதி வழங்கும் பொறுப்பு நீதிமன்றத்திடமே உள்ளது எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஏதோ ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் என்பதற்காக அவரது சொத்துகளை இடிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பண்பாட்டு ஆய்வாளர் ராஜ் கௌதமன் காலமானார்

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு அதிகாரிகள் தாங்களே ஒருவரை குற்றவாளி என அறிவிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

அரசு அதிகாரிகளே நீதிபதிகளாக மாறி, குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீட்டை இடிக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் சட்டப் பாதுகாப்பும் உரிமைகள் உண்டு என நீதிபதிகள் தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வசிக்கும் பட்சத்தில், ஒரு வீட்டை இடித்து, அதில் வசிப்பவர்களின் தங்குமிடத்தை அதிகாரிகள் பறிக்க முடியுமா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் கட்டடங்களை இடிப்பதற்கான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. ஷோ-காஸ் நோட்டீஸ் இல்லாமல் இடிப்புகளை மேற்கொள்ளக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் வழங்கப்பட்ட நபர் 15 நாட்களுக்குள் அல்லது உள்ளூர் குடிமைச் சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் பதில் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

RAC டிக்கெட் கிடைத்தாலும் வெயிட் லிஸ்டுக்கு மாறலாம்! காரணம் இதுதான்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!