அயோத்திக்கு வரும் டிசம்பர் முதல் விமான சேவை; ஏசியாநெட் நியூசுக்கு நிருபேந்திர மிஸ்ரா சிறப்பு பேட்டி!!

Published : Sep 01, 2023, 03:15 PM IST
அயோத்திக்கு வரும் டிசம்பர் முதல் விமான சேவை; ஏசியாநெட் நியூசுக்கு நிருபேந்திர மிஸ்ரா சிறப்பு பேட்டி!!

சுருக்கம்

பிரமாண்ட ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ள அயோத்திக்கான முதல் விமானம்  இந்த ஆண்டு டிசம்பர் முதல் செயல்படத் தொடங்கும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கோவில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் செயல் தலைவர் ராஜேஷ் கல்ராவுக்கு அளித்த பேட்டியில் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், ''சமீபத்தில் அயோத்திக்கு வந்திருந்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் டிசம்பர் முதல் விமானங்கள் தொடங்கும் என்பதை உறுதிபடுத்தினர். குறைந்தது மூன்று விமானங்கள் அயோத்திக்கு நேரடியாக செல்லும். மேலும், அயோத்தியில் பக்தர்களின் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக பிரத்யேக ரயில் சேவைகளும் தொடங்கப்படும்'' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ''இனி ராமேஸ்வரம், திருப்பதி மற்றும் பிற இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் அயோத்திக்கு வரும். கூட்டத்தை சமாளிக்க இந்த போக்குவரத்து சேவைகள் உதவும்'' என்றார்.

அயோத்தி ராமர் கோவில் 2024-லில் ஜனவரி 14-24 கால கட்டங்களில் திறக்கப்படும்போது, பெருந்திரளான பக்தர்கள் வருவதற்கு நகரம் தயாராக உள்ளதா என்று ராஜேஷ் கல்ரா கேட்டபோது, "அயோத்தி கமிஷனர் கூட்டத்தை நிர்வகிப்பது எப்படி என்பது குறித்து சமீபத்தில் விளக்கம் அளித்து இருந்தார்.  அவர் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் உன்னிப்பாக இருந்தார். ஹோட்டல்கள், தர்மசாலாக்கள், இரவு தங்குமிடங்கள், அயோத்திக்கு எத்தனை ரயில்கள் வரும் என்பது உள்பட பல்வேறு தகவல்களை பரிமாறினார்.

 ''அயோத்தியை அனைத்து இந்துக்களுக்கும் புனிதத் தலமாக மாற்ற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் விரும்பும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன'' என்றார்.

நிருபேந்திர மிஸ்ராவின் விரிவான நேர்காணல் விரைவில் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.

2024, ஜனவரி மாதம் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விழாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மூன்றடுக்கு கொண்ட இக்கோவிலின் தரைத்தளம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது, தீபாவளிக்கு தயாராகும் என்று கூறப்படுகிறது. தற்போது பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
கருவறையின் பிரதான கதவு தங்கத்தால் ஆனது. அதில் ராமாயண சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.  கோயிலின் 161 அடி உயர கோபுரமும் தங்கத்தால் மூடப்பட்டிருக்கும். கோயில் வளாகத்தைத் தவிர, ஸ்ரீராம ஜென்மபூமி யாத்ரா பகுதி 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அயோத்தியில், ராம லல்லா பலராமன் வடிவில் வணங்கப்படுகிறார். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!