Election 2024 : நாடாளுமன்ற தேர்தல்.. JEE Main.. MHT-CET.. போன்ற பல தேர்வுகளின் தேதியில் மாற்றம் - முழு விவரம்!

By Ansgar R  |  First Published Apr 2, 2024, 3:13 PM IST

Loksabha Election : நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில் JEE Main, MHT-CET மற்றும் EAPCET போன்ற முக்கிய தேர்வுகளுக்கான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.


நாடாளுமன்ற தேர்தல், ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் நிலையில், பல முக்கிய தேர்வு நாட்கள் மாற்றம் பெறுகின்றது. JEE Main, UPSC prelims, NEET PG, KCET, MHT CET, TS EAPCET, TS POLYCET, மற்றும் ICAI CA உள்ளிட்ட தேர்வுகள், தேர்தல் நாளுடன் ஒத்துப்போவதால் அதில் இப்பொது மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலும் வெளியாகியுள்ளது.

தேசிய தேர்வு முகமை (NTA) JEE முதன்மை 2024 அமர்வு 2ஐ ஏப்ரல் 4 முதல் 15 வரையிலான முந்தைய தேதிகளுக்குப் பதிலாக ஏப்ரல் 4 முதல் 12, 2024 வரை நடத்துவதற்கு மாற்றியமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே தேர்வர்கள் முன்கூட்டியே தயாராக ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். 

Latest Videos

undefined

மனைவியை பேய், பிசாசுன்னு சொன்னா தப்பு இல்லையாம்! பாட்னா உயர் நீதிமன்றம் கொடுத்த விளக்கம்!

MHT-CET (PCM AND PCB) தேர்வுகள்

முதலில் கடந்த ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்கு இடையில் இந்த தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் MHT-CET (PCM குழு) தேர்வுகள் இப்போது மே 2 முதல் 17 வரை நடைபெறும் என்றும். அதே போல PCB குழு தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 30க்கு இடையில் நடைபெறும் எண்டுறம் அறிவிக்கப்பட்டுள்ளது.

TS EAPCET 2024 மற்றும் TS POLYCET

TS EAPCET 2024 தேர்வு மே 9, 10, 11 மற்றும் 12, 2024 ஆகிய தேதிகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்பட உள்ளது. அதே போல முதலில் மே 17, 2024 அன்று திட்டமிடப்பட்ட TS பாலிசெட் இப்போது மே 24, 2024 அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

AP EAPCET 2024

ஆந்திரப் பிரதேச பொறியியல், விவசாயம் மற்றும் மருந்தியல் பொது நுழைவுத் தேர்வு (AP EAPCET) 2024 மே 16 மற்றும் 22, 2024க்கு இடையில் நடைபெறும் என்று ஆந்திரப் பிரதேச மாநில உயர்கல்வி கவுன்சிலால் அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC CIVIL SERVICE EXAM

முன்னதாக மே 26, 2024 அன்று திட்டமிடப்பட்ட UPSC சிவில் சர்வீஸ் ப்ரிலிம்ஸ் தேர்வு, தற்போது ஜூன் 16, 2024க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

NEET PG 2024 மற்றும் ICAI CA தேர்வுகள் 

NEET PG 2024 தேர்வு ஜூன் 23, 2024-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மேலும் ஜூலை 15, 2024ல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதே போல ICAI CA இடைநிலைத் தேர்வுகள் 2024 மே 3, 5 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் குரூப் 1-க்கும், மே 11, 15 மற்றும் 17, 2024ல் குரூப் 2 க்கும் தேர்வுகள் நடத்தப்படும்.

CUET UG தேர்வுகளில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.

CUET UG தேர்வுகள் மே 15 மற்றும் 31, 2024-க்கு இடையில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) இந்த தேர்வுக்கான தேதிகளை மறுபரிசீலனை செய்ய பரிசீலித்து வருகிறது. விரைவில் தேதிகள் அறிவிக்கப்படும்.

JEE ADVANCED, NEET UG தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை.

JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வு மே 26, 2024 அன்று திட்டமிட்டபடி எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். இதேபோல், NEET UG 2024 மே 5, 2024ல் நடக்கவுள்ளது, இதுவரை அதிலும் திருத்தங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

KCET 2024 தேர்வு தேதிகள் பாதிக்கப்படவில்லை.

கர்நாடக பொது நுழைவுத் தேர்வு (KCET) 2024 ஏப்ரல் 18 மற்றும் 19, 2024 ஆகிய தேதிகளில், எந்த மாற்றமும் இல்லாமல் நடைபெறும்.

அடுத்த 3 மாதங்களுக்கு இந்தியாவில் கடும் வெயில் இருக்கும்.. இந்த மாநிலங்களுக்கு தான் அதிக பாதிப்பு..

click me!