பிரணாப் பேச்சில் ‘சோனியாவின் பெயர் நீக்கம்... காங்கிரஸார் அதிர்ச்சி...

First Published Jul 25, 2017, 7:35 PM IST
Highlights
ex president speech removed soniya named


ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி தனது கடைசி உரையாற்றும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குறிப்பிட்டு பேசிய நிலையில்,

எம்.பிக்களுக்கு அளிக்கப்பட்ட பேச்சு அறிக்கையில் அவர் பெயரை மத்திய அரசுநீக்கியது. 

ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி தனது பதவிக்காலம் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் உரையாற்றுவதற்கு முன் பேச்சு தொடர்பான அறிக்கை புத்தகம் அனைத்து எம்.பி.க்களுக்கும் வழங்கப்பட்டது.

அப்போது பிரணாப் முகர்ஜி பேசும்போது, அனைத்து எம்.பி.க்கள்,  கட்சிகளின் தலைவர்கள், உள்ளிட்டவர்களையும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை குறிப்பிட்டுப் பேசினார். ஆனால், அறிக்கையின் அந்த குறிப்பிட்ட இடத்தில் சோனியா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு இருந்ததைக் கண்டு எம்.பி.க்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதேசமயம், பிரணாப் முகர்ஜியின் பேச்சு குறித்து ஜனாதிபதியின் இணைதளத்தில் சோனியா காந்தியின் பெயர் இடம் பெற்று இருந்தது.

சோனியா காந்தியின் பெயர் அறிக்கையில் இல்லாமலும், பிரணாப் முகர்ஜி அவரை குறிப்பிட்டு பேசியபோது, அவை மண்டபத்தில் எம்.பி.க்கள் மத்தியில் ஒருவிதமான சலசலப்பு ஏற்பட்டது.  சில எம்.பி.க்கள், மிகவும் வியப்புடன்  சோனியா காந்தியின்ெபயர் அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால், அதே அறிக்கையை பிரணாப்முகர்ஜி வாசிக்கும் போது அதில் சோனியா பெயர் இடம் பெற்றுள்ளதே என கேட்டனர். 

பிரணாப் முகர்ஜி பேசுகையில், “நான் எம்.பி.யாக இருந்த காலத்தில் எனது பணியை சிறக்க வைத்தவர்களில் பி.வி.நரசிம்மராவ்,  அடல் பிஹாரி வாஜ்பாய், மதுலிமாயே,  டாக்டர் நாத் பாய்,  பிலூ மோடி, ஹிரன் முகர்ஜி, இந்திரஜித் குப்தா, டாக்டர் மன்மோகன்சிங், எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு முக்கியப் பங்கு என்று குறிப்பிட்டார்.

ஆனால், பிரணாப் முகர்ஜிய பேச்சு குறித்து எம்.பி.க்களுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில், பிரணாப் குறிப்பிட்ட அனைவரின் பெயரும் இருந்தது. அத்வானிக்குஅடுத்தார் போல்,  குறிப்பிட்ட, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின்  பெயர் மட்டும் நீக்கப்பட்டு இருந்தது.

அதேசமயம், ஜனாதிபதி மாளிகைக்கான இணையதளத்தில் உள்ள அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

click me!