அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு!

By Manikanda Prabu  |  First Published May 7, 2024, 1:08 PM IST

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 7ஆம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது, தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமலாக்கத்துறையிடம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் மே 7ஆம் தேதிக்கு (இன்று) வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

Tap to resize

Latest Videos

அதன்படி, தேர்தல் நேரம் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாகவும், சிறையில் இருந்தபடியே கோப்புகளில் அவர் கையொப்பமிடுவது தொடர்பாகவும் என இரண்டு முக்கிய விஷயங்களை பரிசீலிப்பது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதுவரை அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணை நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கியது.

அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்த வாதங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இன்னும் நாங்கள் பதில் அளித்து முடிக்கவில்லை. தேர்தலைக் காரணம் காட்டி உடனடியாக ஜாமீன் கேட்பதை வானம் இடிந்து விடுவது போல சித்தரிக்கிறார்கள். எங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக வைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பாக கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

Pudhumai pen scheme பெண் கல்வி வளர்ச்சியில் புதுமைப் பெண் திட்டம்: திமுக அரசின் சாதனை!

அதேசமயம், ஒட்டுமொத்த நாடும் தன்னை கவனித்துக் கொண்டிருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இந்த வழக்கில் தான் எதுவும் குறிக்கிடாமல் இருந்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு, நாங்கள் உங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி விடுவிக்கிறோம் என்றால் நீங்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்க அனுமதிக்கப்படுவீர்கள் அதே நேரத்தில் உங்களது அரசு கடமைகளையும் செய்வீர்கள் அது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் தானே? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், உங்களை விடுவித்தால் அதன் மூலமாக நீங்கள் அரசு வேலைகளை செய்வதை நாங்கள் விரும்பவில்லை என நீதிபதிகள் தங்கள் தரப்பு கருத்தாக கூறியுள்ளனர். அத்துடன், தேர்தல் நடக்கவில்லை என்றால் இடைக்கால நிவாரணம் வழங்கப்படாது எனவும் விசாரணையின் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

click me!