டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. என்.டி.குப்தா, டெல்லி குடிநீர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஷலப் குமார் உள்ளிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு நாளைக்கு ரூ.7 சேமிப்பு.... மாதம் ரூ.5000 ஓய்வூதியம் - மத்திய அரசின் சூப்பர் சேமிப்பு திட்டம்!
டெல்லி, சண்டிகர், வாரணாசியில் உள்ள 12க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
டெல்லி குடிநீர் வாரியத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. அமலாக்கத்துறை தொடர்பான முக்கிய தகவல்களை ஆம் ஆத்மி கட்சி இன்று யூடியூபில் வெளியிடப் போவதாக அறிவித்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
“இந்த சோதனையை கண்டு நாங்கள் பயப்படவில்லை. விதிமீறல் தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை அரசாங்க சாட்சியாக மாற்ற அமலாக்கத்துறை முயற்சிகிறது.” என இன்று காலை செய்தியளர்களை சந்தித்த டெல்லி அமைச்சர் அதிஷி கூறினார்.
டெல்லி குடிநீர் வாரியத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக, சிபிஐ பதிவு செய்த வழக்கில் இரண்டு நிதி முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் டெல்லி குடிநீர் வாரியத்தின் முன்னாள் தலைமை பொறியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.