ஊழியர்களுக்கு 'பென்ஸ்' காரை பரிசளித்த வைர வியாபாரி! அடித்தது ஜாக்பாட்... தலைசுற்ற வைக்கும் பரிசுகள்!

Published : Sep 30, 2018, 03:04 PM IST
ஊழியர்களுக்கு 'பென்ஸ்' காரை பரிசளித்த வைர வியாபாரி! அடித்தது ஜாக்பாட்... தலைசுற்ற வைக்கும் பரிசுகள்!

சுருக்கம்

தனது நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு, வைர வியாபாரி ஒருவர் பென்ஸ் கார் வழங்கியுள்ளார்.

தனது நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு, வைர வியாபாரி ஒருவர் பென்ஸ் கார் வழங்கியுள்ளார். வைர வியபாரி அளித்த இந்த பரிசால், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைர வியாபாரியின் இந்த பரிசு, பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில், பிரபல வைர ஏற்றுமதி நிறுவனம் ஒன்று உள்ளது. இதனை சவ்ஜி தோலாகியா என்பவர் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சுமார் 5500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். சவ்ஜி தோலாகியா, தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவ்வப்போது சில சலுகைகளை வழங்கி அவர்களுக்கு அதிர்ச்சி அளிப்பார். அவரது இந்த அதிரடி சலுகையால், ஊழியர்களும் சிறப்பான தங்களது வேலைத்திறனை வெளிப்படுத்தி வருவார்கள். 

இந்த நிலையில், 25 வருடங்களாக வேலை பார்க்கும் 3 ஊழியர்களை சிறப்பிக்கும் வகையில், தலா பென்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார். பரிசாக வழங்கப்பட் பென்ஸ் கார், ஒரு கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும்.

இந்த பரிசை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், இது வியப்பாகவும், மகிழ்ச்சியாக உள்ளதாகவும் ஊழியர்கள் கூறினர்.

PREV
click me!

Recommended Stories

பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சம்பளத்தில் கை வைக்கும் அரசு! முதல்வர் அதிரடி சரவெடி
சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த இல்லீகல் 'கிஃப்ட்'..! இந்தியாவிற்கு புண்ணாக மாறிய வஞ்சகம்..!