மூத்த வழக்கறிஞர், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்

By karthikeyan VFirst Published Sep 8, 2019, 9:55 AM IST
Highlights

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 95.
 

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி வயது முதிர்ச்சி காரணமாக காலமானார். அவருக்கு வயது 95.

வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்றுவந்த ராம் ஜெத்மலானி காலமானார். ஒருங்கிணைந்த இந்தியாவில்(பாகிஸ்தான் பிரிவதற்கு முன்) சிந்து மாகாணத்தில் 1923ம் ஆண்டு பிறந்த ராம் ஜெத்மலானி, 13 வயதில் பள்ளிப்படிப்பை முடித்தார். 17 வயதில் சட்டப்படிப்பை முடித்தார். 17 வயதிலேயே வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். 

1959ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசுக்கும் நானாவதி என்ற தனிநபருக்கும் இடையேயான வழக்குதான், ராம் ஜெத்மலானி ஆஜரான முதல் வழக்கு. வழக்கறிஞராக அவரது கெரியரில், 2ஜி வழக்கு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளில் வாதாடியுள்ளார். 

பங்குச்சந்தை ஊழல் வழக்கில் சிக்கிய ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் ஆகியோருக்கு ஆதரவாகவும், நாடாளுமன்றத்தை தாக்கிய வழக்கில் அஃப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தளர்த்தக்கோரி வாதாடியவர். 

மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!