மின்சாரவேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை..! உணவு தேடி வயல்வெளிக்கு வந்த போது நிகழ்ந்த சோகம்..!

Published : Oct 20, 2019, 01:22 PM ISTUpdated : Oct 20, 2019, 01:24 PM IST
மின்சாரவேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை..! உணவு தேடி வயல்வெளிக்கு வந்த போது நிகழ்ந்த சோகம்..!

சுருக்கம்

மேற்குவங்க மாநிலத்தில் உணவு தேடி வந்த ஆண் யானை மின்சார வெளியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் இருக்கிறது மிலான்பள்ளி கிராமம். மலையடிவாரத்தை ஒட்டி இந்த ஊர் இருப்பதால் அடிக்கடி யானைகள் உணவு தேடி வரும் என்று கூறப்படுகிறது. இதனால் வயல்வெளிகளில் பயிருக்கு பாதுகாப்பாக வேலிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் 12 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உணவிற்காக வயல்வெளி அருகே வந்திருக்கிறது. அப்போது அங்கு போட்டிருந்த வேலியை தாண்டிச் செல்ல முயன்றுள்ளது. அந்த வயலின் சொந்தக்காரர் வெளியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சியிருந்திருக்கிறார். இதை அறியாமல் யானை வேலியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இதில் ஆண் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் யானை இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானைக்கு உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அவர்கள் நிலத்தின் உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்டு யானை ஒன்று ரயில் மோதி உயிரிழந்திருந்தது. அதன் பிறகு இரண்டு  நாட்களுக்கு முன்னர் கோவையில் யானை ஒன்று அகழியில் சிக்கி இறந்து கிடந்தது. இதன் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மற்றொரு யானை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

காதலியுடன் ஒரு நாள் செலவிட விடுமுறை கேட்ட ஊழியர்! மேனேஜர் விடுமுறை அளித்தாரா? மறுத்தாரா?
வரலாற்றில் எந்த தலைவருக்கும் கிடைக்காத கௌரவம்.. பிரதமர் மோடியை பெருமைப்படுத்திய எத்தியோப்பியா..