பணம் எடுக்க பேங்க்,ஏடிஎம்மில் வரிசையில் நிற்க வேண்டாம்: போன் செய்தால் டோர்டெலிவரி

By Selvanayagam PFirst Published Oct 19, 2019, 10:26 PM IST
Highlights

லட்சக்கணக்கான வாடிக்ைகயாளர்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று சேவை செய்ய பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன.
 

குறிப்பாக முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் போன் செய்தால் வீட்டுக்கே சென்று பணம் டெபாசிட் செய்தல், பணம் அளித்தல் போன்ற பணிகளை செய்ய உள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரசிர்வ் வங்கி அறிவுறுத்தலில், வங்கிகள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கேச் சென்று சேவை அளிக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் விரைவில் ஒரு கட்டத்தில் இதற்கான திட்டத்தை வகுத்து இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

என்னென்ன சேவைகள்?:

வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்வது, எடுப்பது, காசோலை, டிடியை வங்கியில் டெபாசிட் செய்வது, கணக்கு பட்டியல் கோருதல், புதிய காசோலை புத்தகம் கோருதல், டிடி, டெர்ம் டெபாசிட், காசோலை புத்தகம் வீட்டுக்கு வரவழைத்தல், நிலையான வைப்பு நிதி மீதான டிடிஎஸ் பிடித்தம் விலக்கு பெற 15ஜி, 15 எச் படிவம் பெறுதல், வருமான வரி சலான், டிடிஎஸ் படிவம் 16 பெறுதல், கிப்ட் கார்ட் போன்றவற்றை பெறுதல் ஆகிய சேவைகள் வீட்டுக்கே வழங்கப்பட உள்ளது.

இந்த சேவைகளை வழங்குவதற்கு தனியார் துறையினர் விருப்பம் இருந்தால் வரலாம் என்று யூகோ வங்கி கோரியுள்ளது. தேர்வு செய்யப்படும் ஏஜென்சி அல்லது அமைப்பு மூலம் அனைத்து பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை கிடைக்கும் என கூறப்படுகிறது.

சேவை வழங்கும் நிறுவனம் வங்கி மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஏஜென்டுகளை வழங்குவார்கள். அந்த ஏஜெண்டுகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெறுதல், பணம் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்வார்கள். இந்த சேவையை வழங்க தேர்வு செய்யப்படும் நிறுவனம், கால் சென்டர், மொபைல் ஆப்ஸ் மற்றும் இணைய தளம் மூலம் சேவை வழங்க வேண்டும். முதல் கட்டமாக இந்த சேவை மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு மற்ற வாடிக்கையாளர்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படலாம்

click me!