சபரிமலையில் யானை தாக்கி தமிழக பக்தர் உயிரிழப்பு... உடலை 8 கிலோ மீட்டர் சுமந்து வந்த பரிதாபம்..!

By vinoth kumar  |  First Published Jan 6, 2020, 5:58 PM IST

சபரிமலை பெரியப் பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட வனத்துறையினர் 8 கிலோ மீட்டர் சுமந்து வந்து பம்பையில் உள்ள அரசு மருத்துவமைனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்.


சபரிமலை பெரியப் பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட வனத்துறையினர் 8 கிலோ மீட்டர் சுமந்து வந்து பம்பையில் உள்ள அரசு மருத்துவமைனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்.

Tap to resize

Latest Videos

கேரள மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இரு பாதைகள் இருக்கின்றன. அதில் ஒன்று பம்பாவில் இருந்து நேரடியாக மலைப் பாதையாக சன்னிதானம் செல்வது. மற்றொரு வழி பாரம்பரிய பாதையான எருமேலியில் இருந்து காட்டு வழிப்பயணமாக கிட்டத் தட்ட 35 கிலோ மீட்டர் நடந்து சென்று சன்னிதானம் செல்வது. இந்தப் பாதையில் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் பயணம் செய்வார்கள்.

தற்போது இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் பாதுகாப்பாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்து இருந்தனர். இந்நிலையில். கோவையில் இருந்து சென்ற 13 ஐயப்பப பக்தர்கள் கொண்ட குழுவினர் இந்த பகுதியில் உள்ள முக்குழி என்ற இடத்தில் இரவு முகாமிட்டு இருந்தனர். அதிகாலை நேரத்தில் அங்கு யானைகள் கூட்டம் வந்ததால் பயந்துபோன பக்தர்கள் ஓட்டம்பிடித்தனர். அப்போது கோவை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பத்ரப்பா (58) என்ற ஐயப்பப பக்தர் யானைகள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். இதில் யானை மிதித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுதொடர்பாக வன ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வன ஊழியர்கள் பத்ரப்பாவின் உடலை மீட்டனர். அவரது உடலை வனப்பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் சுமந்து பம்பையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது. தற்போது, சபரிமலை பெரியப் பாதையில் நள்ளிரவும், அதிகாலையும் பக்தர்கள் பயணம் செய்ய வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!