ECI:நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையம் இன்று தேதி அறிவிப்பு

By Pothy RajFirst Published Jan 18, 2023, 9:54 AM IST
Highlights

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தேர்தல் தேதி, எத்தனை கட்டங்களாகத் தேர்தல் நடத்துவது உள்ளிட்ட விவரங்களை அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதியவரை 500 மீட்டருக்கு பைக்கில் இழுத்துச் சென்ற இளைஞர்: பெங்களூரு போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு

இன்றுதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிகிறது. நாகாலாந்து மாநிலத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் 12ம் தேதியிலும், மேகாலயா சட்டப்பேரவைக் காலம் மார்ச் 15ம் தேதியிலும், திரிபுராவின் பதவிக்காலம் மார்ச் 22ம் தேதியும் முடிகிறது. இந்த 3 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தொகுதிகள் தலா 60 தொகுதிகள் உள்ளன. 

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதால் அதைக் கருத்தில்கொண்டுதான் தேர்தல் தேதி அறிவிப்பு இருக்கும். பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டியிருப்பதால், அதைக் கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. 2023ம் ஆண்டில் நடக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த 3 மாநிலங்களில் நடக்கிறது.

ஜன.19 கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு செல்கிறார் பிரதமர் மோடி… முழு பயண விவரம் இதோ!!

திரிபுராவில் பாஜக அரசுஆள்கிறது, நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி ஆள்கிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி ஆள்கிறது, இந்த கட்சி மட்டும்தான் தேசிய அங்கீகாரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!