சட்டத்துக்கு உட்பட்டு ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தயார்! ராஜீவ் குமார் அறிவிப்பு

By SG Balan  |  First Published Sep 6, 2023, 9:04 PM IST

இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி செயல்பட தயாராக உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.


சட்ட விதிகளின்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தத தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி இன்று (புதன்கிழமை) நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி செயல்பட தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Latest Videos

undefined

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் நிர்வாக அமைப்புகளுடன் சந்திப்புகளை நடத்துவதற்காக ராஜீவ் குமார் உள்ளிட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் போபாலுக்குச் சென்றுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியுள்ள ராஜீவ் குமார், அக்டோபர் 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 5.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்தார். 'ஒரு நாடு, ஒரே தேர்தல்' என்ற குறித்த கேள்விக்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், "அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் செயல்படும்" என்று கூறினார்.

"சட்ட விதிகளின்படி, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நடைபெறும் நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த நேரம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவும் தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலை அறிவிக்கலாம்" என்று ராஜீவ் குமார் கூறினார். சட்டசபை தேர்தலிலும் இதே விதிமுறைகள் உள்ளன.

இதனால், சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை மத்திய அரசு கடந்த வாரம் அமைத்தது.

230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஏற்கனவே தனது 39 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

click me!