தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்... தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்!!

By Narendran SFirst Published May 16, 2022, 8:20 PM IST
Highlights

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், அதிமுகவின் எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், நவநீத கிருஷணன், விஜயகுமார் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதை அடுத்து காலியிடத்தை நிறுப்புவதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் என இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10-ல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24 ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரி முன்பு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர். இதனிடைய, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதில், 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில், காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 3 இடங்களில் திமுக வேட்பாளர்களான சு.கல்யாணசுந்திரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!