மக்களவைத் தேர்தல் 2024: 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி - இந்திய தேர்தல் ஆணையம்!

By Manikanda Prabu  |  First Published Feb 9, 2024, 4:34 PM IST

மக்களவைத் தேர்தல் 2024இல் நாடு முழுவதும் சுமார் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது


நாடாளுமன்றத்தின் 17ஆவது மக்களவை இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி, ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான உத்தேச தேதியை அறிவித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களவை தேர்தலையொட்டி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாகவும், நேரடியாக அந்த மாநிலங்களுக்கு சென்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்த ஆலோசனை கூட்டங்களின்போது, இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாநில சட்டம் - ஒழுங்கு, வாக்குச்சாவடிகள் நிலை போன்றவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. தேர்தலுக்கு வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் அழியாக மை தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சரண் சிங்கிற்கு பாரத ரத்னா: பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த ஆர்.எல்.டி. - இந்தியா கூட்டணிக்கு அடுத்த அடி!

மக்களவை தேர்தல் 2024க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களவைத் தேர்தல் 2024இல் நாடு முழுவதும் சுமார் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், உலகில் அதிக வாக்காளர் கொண்ட நாடு இந்தியா என தெரியவந்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வாக்களிக்க தகுதி பெற்ற மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 96,88,21,926 கோடி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை - 49,72,31,994 கோடி, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை - 47,15,41,888 கோடி, மூன்றாம் பாலித்தனவர்கள் - 48,044 ஆயிரம் ஆகும்.

மேலும், மக்களவை தேர்தல் 2024இல் வாக்களிக்க தகுதி பெற்ற 18-19 வயதுடைய முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை - 1,84,81,610 கோடியாக உள்ளது. 20-29 வயதுடையவர்களின் எண்ணிக்கை - 19,74,37,160 கோடியாகடும், 80 வயதை தாண்டியவர்களின் எண்ணிக்கை - 1,85,92,918 கோடியாகவும் உள்ளது. 100 வயதை கடந்த வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 2,38,791 லட்சமாக உள்ளது.

click me!