10 எம்பிகளுக்கான எலெக்‌ஷன் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

Asianet News Tamil  
Published : Jul 14, 2017, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
10 எம்பிகளுக்கான எலெக்‌ஷன் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

சுருக்கம்

election commission about election for mp

10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலமும், குஜராத்தில் 3 உறுப்பினர்களின் பதவி காலமும் முடியும் தருவாயில் உள்ளது.

மத்திய பிரதேஷத்தில் அனில் மாதேவ் தவே காலமானதால் ஒரு உறுப்பினர் பதவியும் காலியாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் டெரிக் ஓ பிரையன், சீதாராம் யெச்சூரி பதவி காலம் முடிவடைகிறது.

குஜராத்தில் ஸ்மிருதி ராணியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடைகிறது.

இதனால் மொத்தமாக 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கான இடங்கள் காலியாக போகிறது. இந்நிலையில், இந்த பத்து இடங்களுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.     

PREV
click me!

Recommended Stories

இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!