மல்லையாவின் ரூ.100 கோடி சொகுசு பங்களா பறிமுதல்...- அமலாக்கப்பிரிவினர் அதிரடி நடவடிக்கை...

First Published May 19, 2017, 8:27 AM IST
Highlights
ED impounds Vijay Mallya Alibag farm house worth Rs 100 crore


தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மஹாராஷ்டிரா கடற்கரையில் உள்ள அவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை அமலாக்கத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

இதற்கான நோட்டீஸை அந்த சொகுசுபங்களாவின் வாசலில் ஒட்டி அந்த பங்களாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

17 ஏக்கர்

மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம், அலிபாக் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த சொகுசு பங்களாவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோதிலும், இப்போது பறிமுதல் செய்துள்ளனர்.

ரூ.900 கோடி

தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐ.டி.பி.ஐ. வங்கயில் ரூ.900 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத வழக்கு, உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளை அமலாக்கப்பிரிவினர் விசாரணை  செய்து வருகின்றனர்.

இவருக்கு சொந்தமான சொகுசுபங்களா ராய்காட் மாவட்டம், அலிபாக் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இணைத்துக்கொண்ட அமலாக்கப்பிரிவினர் அந்த சொகுசுபங்களாவை ஒப்படைக்கமான்டவா பார்ம்ஸ் நிறுவனத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டனர்.

தள்ளுபடி

இந்த மான்டவா பார்ம்ஸ் பிரைவட் லிமிட்டட்  என்பது விஜய் மல்லையாவால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அமலாக்கப்பிரிவு உத்தரவுக்கு எதிராக மான்டவா பார்ம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை கடந்த 2 நாட்களுக்கு முன் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.

ரூ.100 கோடி மதிப்பு

இதையடுத்து, நடவடிக்கையில் இறங்கிய அமலாக்கப்பிரிவினர் கடற்கரை ஓரத்தில் உள்ள அந்த சொகுசு பங்களாவை பறிமுதல் செய்து, அதற்கானநோட்டீஸை ஒட்டினர். அரசின் மதிப்பில் இந்த சொகுசு  பங்களாவின் மதிப்பு ரூ.25 கோடி என்ற போதிலும் சந்தை மதிப்பில் ரூ. 100 கோடி என்று அமலாக்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

click me!