துணை முதல்வர் அலுவலகத்தில் திருட்டு – முக்கிய ஆவணம், கம்ப்யூட்டர் அபேஸ்

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
துணை முதல்வர் அலுவலகத்தில் திருட்டு – முக்கிய ஆவணம், கம்ப்யூட்டர் அபேஸ்

சுருக்கம்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அலுவலகத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதலமைச்சராக ஆம்ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளார். துணை முதல்வராக சிசோடியா பதவி வகிக்கிறார். இவரது அலுவலகம், கிழக்கு டெல்லி பத்பர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ளது. நேற்று தனது அலுவலகத்தில் உள்ள பணிகளை முடித்துவிட்டு, அலுவலகத்தை கொண்டு சிசோடியா வீட்டுக்கு சென்றார்.

இன்று காலை வழக்கம்போல், தனது அலுவலகம் சென்றபோது, அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் முக்கிய ஆவணங்களை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சிசோடியா, தனது அலுவலகத்தை பூட்டி செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார், வலைவீசி தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Expensive Egg: ஒரே ஒரு முட்டை விலை ரூ.25,000..! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
LPG Scam Alert: Indane & HP Gas Alert: ஆன்லைன் கேஸ் புக்கிங்கில் நடக்கும் நூதன மோசடிகள்..!