பெண்களை மதிக்கும் கிரிக்கெட் வீரர் டிவைன் பிராவோ ! தன் நாட்டு பெண்களுக்காக அவர் செய்த காரியத்தைப் பாருங்க !!

By Selvanayagam PFirst Published Jul 11, 2019, 11:56 AM IST
Highlights

மாதவிடாய் குறித்த போதிய விழப்புணர்வு இல்லாத தன் நாட்டு பெண்களுக்காக கோவை அருணாச்சல முருகானந்தத்தை சந்தித்து, குறைந்த விலையில் நாப்கின் தயாரிப்பது குறித்து தெரிந்து கொண்ட கிரிக்கெட் வீரர் பிராவோ, தன் நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் எந்திரத்தை இலவசமாக பொறுத்தித் தர முடிவு செய்துள்ளார்.

பிராவோ தனது சொந்த நாடான டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள பள்ளிகளில் பயிலும் பெண்களின் சதவீதம் குறைந்துக்கொண்டே வருவது குறித்து அறிநிதிருக்கிறார். அதற்கான காரணத்தை யாரும் பெரிதுப்படுத்தாமல் இருக்கிறார்கள். 

இது குறித்து ஆராயுமபோது தான் அங்குள்ள  பெண் பிள்ளைகள் தங்களுடைய மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வும், அதை எதிர்கொள்ளும் வசதிகளின்றியும் இருப்பதால் தான் கல்வி பாதிக்கப்படுகிறது என்று தெரியவந்தது.

முற்போக்கு மண் என்று சொல்லப்படும் தமிழகத்திலேயே கூட இன்று வரை மாதவிடாய் பற்றி பொதுவெளியில் பேச தயங்கும் நிலை தான் உள்ளது. அப்படி இருக்கும்போது அமெரிக்க கண்டத்தின் கரீபியன் தேத்திலுள்ள இரு தீவுகளில் உள்ள மக்களின் நிலையை எப்படி இருக்கும் என்பது சொல்ல வேண்டியதில்லை.

தன் நாட்டு பெண்களுக்கான மாதவிடாய் பற்றிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எண்ணிய பிராவோ, அதுபற்றிய தேடலில் இருக்கும் போது, குறைந்த விலையில் பாதுகாப்பான நாப்கின் தயாரிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த அருணாச்சல முருகானந்தம் பற்றி தெரிய வருகிறது. 

முருகானந்தம் பற்றிய ஆவணப்படம் அவருக்கு பெரிய நம்பிக்கையளிக்கிறது. உடனடியாக தமிழகம் வந்த பிராவோ, கோவையில் உள்ள முருகானந்தத்தின் கிராமத்திலயே அவரை சந்தித்து மாதவிடாய் பற்றிய தங்கள் நாட்டின் பிரச்சினையையும், தேவைகள் பற்றியும் கூறுகிறார். 

அதுவரை பிராவோ என்றால் யாரென்றே தெரியாத முருகானந்தம், பிராவோவின் அந்த நல்லெண்ண முயற்சிக்காகவே, நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உடனடியாக தயாரித்து அனுப்பவதாக உறுதியளிக்கிறார். 

ஒரு இயந்திரம் தாருங்கள் அதை வைத்து நாங்கள் இன்னும் சில இயந்திரங்கள் தயாரித்து, எங்கள் ஊர் பள்ளி, கல்லூரிகளில் வைத்துக்கொள்கிறோம் என்ற பிராவோவை கட்டி அணைத்த முருகானந்தம், நாப்கின் தயாரிக்கும் முறையையும் பிராவோவுக்கு கற்றுத்தந்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்கிறார். 

இதையடுத்து தனது தீவு முழுவதும்  பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவசமா நாப்கிக் தயாரிக்கும் எந்திரங்களை பிராவோ நிறுவ உள்ளார். பிராவோவின் இந்த உதவியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

click me!