தேசிய மலர் தாமரை இல்லையாம்... நாடாளுமன்றத்தில் அறிவித்தது மோடி சர்க்கார்!

By Asianet TamilFirst Published Jul 11, 2019, 7:27 AM IST
Highlights

இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசிய பறவை மயில், தேசிய மலர் தாமரை என்றே பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்து பொதுவெளி வரை நம்பப்பட்டுவருகிறது. ஆனால், தாமரை மலரை தேசிய மலராக மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவித்துள்ளது அரசு. 

இந்தியாவின் தேசிய மலர் தாமரை இல்லை என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.


இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசிய பறவை மயில், தேசிய மலர் தாமரை என்றே பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்து பொதுவெளி வரை நம்பப்பட்டுவருகிறது. ஆனால், தாமரை மலரை தேசிய மலராக மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவித்துள்ளது அரசு. இதுபற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
 “இந்தியாவின் தேசிய விலங்காக புலியையும் தேசிய பறவையாக மயிலையும் மத்திய அரசு அங்கீகரித்து 2011-ல் அறிவித்தது. சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இதில் தேசிய மலரை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அப்படி எந்த அறிவிக்கையையும் செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.

 
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு மூலம் தாமரை மலர் இந்தியாவின் தேசிய மலராக அங்கீகரிக்கப்படவில்லை என்பது தெளிவாகிவிட்டது. ஆனால், தாமரையை தேசிய மலராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் எதையும் அறிவிக்கவில்லை. 

click me!