ஊழல் தடுப்பு பிரிவு சோதனையின் போது, ரூ.2 கோடி பணத்தை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் வீசிய அரசு அதிகாரி..

Published : Jun 23, 2023, 05:17 PM IST
ஊழல் தடுப்பு பிரிவு சோதனையின் போது, ரூ.2 கோடி பணத்தை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் வீசிய அரசு அதிகாரி..

சுருக்கம்

ஊழல் தடுப்புப் பிரிவின் சோதனையின் போது ஒடிசா அரசு அதிகாரி ஒருவர் ரூ.2 கோடி பணத்தை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஒடிசாவில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையின் போது மாநில நிர்வாக அதிகாரி ஒருவர் தனது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் பணத்தை வீச முயன்றபோது, ரூ. 2 கோடியை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நபரங்பூர் மாவட்டத்தின் கூடுதல் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாந்த் ரௌத், விடியற்காலையில் நடந்த சோதனையின் போது, புவனேஸ்வரில் உள்ள தனது வீட்டிலிருந்து தனது பக்கத்து வீட்டுக்காரரின் மொட்டை மாடியில் ரூபாய் நோட்டுகளை வீசி கையும் களவுமாக பிடிபட்டதாக ஒடிசாவின் விஜிலென்ஸ் இயக்குனரகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனைக்கு தலைமை தாங்கிய மூத்த அதிகாரி ஒருவர் பேசிய போது “ அவரது வீட்டில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாகப் பெற்ற ஆறு அட்டைப்பெட்டிகளை நாங்கள் கைப்பற்றினோம். அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தன. நாங்கள் இதுவரை ரூ. 2 கோடி ரொக்க பணத்தைக் கண்டுபிடித்துள்ளோம், ஆனால் மற்ற வீடுகளில் இன்னும் அதிகமாக பணம் இருக்கலாம். இந்த நாளின் முடிவில் அவரது சட்டவிரோத வருமானம் குறித்து எங்களுக்குத் தெரியவரும்” என்று தெரிவித்தார்.

பிரசாந்த் ரௌத், ரூட் மாவட்டத்தில் உள்ள கல் சுரங்க மாஃபியாவிடம் விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாமல் அரசு நிலங்களில் இருந்து தோண்ட அனுமதித்து பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், ஏழு துணை கண்காணிப்பாளர்கள், எட்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அடங்கிய ஒன்பது ஒடிசா விஜிலென்ஸ் குழுக்கள் புவனேஸ்வர், நபரங்பூர் மற்றும் பத்ரக் ஆகிய 9 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள தொகுதி மேம்பாட்டு அதிகாரியாக இருந்தபோது, பஞ்சாயத்து செயல் அதிகாரி ஒருவரிடம் ரூ.1 லட்சம் (லஞ்சம்) கேட்டதற்காக விஜிலென்ஸ் குழுவால் கைது செய்யப்பட்ட பிரசாந்த் ரௌத் மீது ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் உள்ளன. 2022 ஆம் ஆண்டில் நாட்டிலேயே மிக அதிகமாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக 84 வழக்குகளை மாநில விஜிலென்ஸ் துறை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 200 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

பிஜு ஜனதா தள ஆட்சியின் கீழ் ஒடிசா மாநில அரசு அதிகாரிகள் பெரும் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டி இந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி, ஒடிசா பாஜக, பஞ்சாயத்து ராஜ் தினத்தை, ஊழல் தினமாக கொண்டாடியது. போராட்டத்தைக் குறிக்கும் வகையில் கழுத்திலும் கைகளிலும் ரிப்பன்கள்/துணிகள் அணிந்து 314 தொகுதிகளிலும் உள்ளிருப்புப் போராட்டங்களையும் பாஜகவினர் நடத்தினர். பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.5,000 கோடி முறைகேடுகள் நடைபெறுவதுடன், ஊழலின் விளைநிலமாக ஒடிசா மாறியுள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். பஞ்சாயத்து ராஜ் என்பது கிராமப்புற இந்தியாவில் உள்ள கிராமங்களின் உள்ளூர் சுயராஜ்ய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!