
கேரளாவில் படகுப்போட்டி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்தகைய போட்டிகளில் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் கலந்துகொள்வதுண்டு. அந்த வகையில் கேரளாவில் உள்ள சம்பக்குளத்தில் பெண்களுக்கான படகுப் போட்டி இன்று நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இந்த படகுப் போட்டியை காண மாவட்ட கலெக்டர் ஹரிதா மற்றும் அமைச்சர் பி பிரசாத் ஆகியோரும் வந்திருந்தனர்.
இதில் பெண்களுக்கான படகுப்போட்டி நடைபெற்றபோது 17 பெண்களுடன் சென்ற படகு ஒன்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பார்வையாளர்களும், அதிகாரிகளும் பதறிப்போயினர். விபத்தில் சிக்கிய அனைவரும் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் என்பதால் பாதுகாப்பாக அனைவரும் உயிர் பிழைத்தனர். இதில் சிறிதாக காயமடைந்தவர்களுக்கு சம்பக்குளம் தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... Chandrayaan-3 : சந்திரயான் - 3 விண்ணில் ஏவப்படும் தேதியை அறிவித்தார் இஸ்ரோ தலைவர் - எப்போது தெரியுமா?
விபத்துக்குள்ளான படகில் 17 பெண்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. விபத்துக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் ஹரிதாவின் உத்தரவின் பேரில் அங்கு அடுத்தடுத்து நடைபெற இருந்த படகுப்போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்த விபத்தில் சிக்கிய அனைவரும் நீச்சல் தெரிந்தவர்கள் என்பதால் உயிர்சேதம் எதுவுமின்றி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கேரளாவில் படகு விபத்துக்கள் அவ்வப்போது நடைபெறுவதுண்டு, கடந்த மே மாதம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மக்களே இன்று காணலாம் சூப்பர் மூன் எனப்படும் பக் மூன்; எப்படி பார்க்க வேண்டும்?