பாஜக ஸ்டிக்கர் ஒட்டிய காரில் குடிபோதையில் அரை நிர்வாணத்தில் ஒருவரையொருவர் மது அருந்திவிட்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, அரை நிர்வாணமாக, போதையில் இருவர் மது அருந்தி ஒருவரையொருவர் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பிரயாக்ராஜ் இரயில்வே சந்திப்பில் உள்ள கேட் எண் 2 க்கு முன்பாக உள்ள தெருவில் இந்த இளைஞர்கள் வெளிப்படையாக மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் மூன்றாவது நபர் மீது மதுவை ஊற்றுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த இளைஞர்கள் பயன்படுத்திய காரில் 'மண்டல் தலைவர், பாரதிய ஜனதா கட்சிக்கு சொந்தமானது' என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை பலர் கவனித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
प्रयागराज स्टेशन के गेट नंबर 2 के सामने राधे लॉज के पास मंडल अध्यक्ष भारतीय जनता पार्टी का स्टीकर लगी हुयी कार के ऊपर चढ़ कर और बाहर निकल कर शराब के नशे मे धुत्त होकर,शराब की बोतल हाँथ मे लिए उत्पात मचा रहे मनचले,ना पुलिस का डर ना कानून व्यवस्था की चिंता। pic.twitter.com/uKE1u6spWT
— Adv. Madan Saroj🐦 (@MadanSaroj7)போக்குவரத்து விதிகளை மீறியதால் மோட்டார் வாகனச் சட்டத்தின் தகுந்த விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக பிரயாக்ராஜ் டிசிபியின் எக்ஸ் ஹேண்டில் ட்வீட் செய்துள்ளார். ஊடக அறிக்கையின்படி, வீடியோவில் உள்ள வாகனம் ஃபதேபூரைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டது. போலீசார் வாகனத்தின் பதிவை உறுதி செய்து ரூ. 24,500 அபராதம் விதித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.