வணிகக் கப்பலில் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் ஆனால் தீயில் கப்பலின் செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
சனிக்கிழமை அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கு உள்ளான கப்பல் சவுதி அரேபியாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து மங்களூரு நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்று கொண்டிருந்தது என்றும் அதில் 20 இந்தியர்கள் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் போர்பந்தர் கடற்கரையில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல்படையின் கப்பல் இருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்தியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படை கப்பலான ஐசிஜிஎஸ் விக்ரம், தாக்கப்பட்ட வணிகக் கப்பலுக்கு உதவ அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள மற்ற கப்பல்களுக்கும் உதவி வழங்குமாறு கோரியது.
பின்னர், வணிகக் கப்பலில் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் ஆனால் தீயில் கப்பலின் செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்ட மால்டாவின் சரக்குக் கப்பலில் இருந்து அதன் மாலுமியை இந்திய கடற்படை காப்பாற்றியது. அடுத்த சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.