லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியின் மறைவிடம் அழிப்பு… வெளியானது ட்ரோன் காட்சிகள்!!

By Narendran SFirst Published Jun 29, 2022, 9:19 PM IST
Highlights

பந்திபோராவின் நாடிஹால் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினர் குண்டு வீசி அழித்தது தொடர்பான ட்ரோன் காட்சிகளை இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது. 

பந்திபோராவின் நாடிஹால் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினர் குண்டு வீசி அழித்தது தொடர்பான ட்ரோன் காட்சிகளை இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர் நாடிஹாலில் வசிக்கும் மெஹ்பூப் உல் இனாம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பந்திபோராவில் உள்ள பாப்சானில் உள்ள சோதனைச் சாவடியில் ஒரு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியை காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்கள் கவுன்ட்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் துவங்கியது

இதுக்குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பந்திபோராவில் உள்ள பாப்சானில் உள்ள சோதனைச் சாவடியில் ஒரு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி இருப்பதாக தெரியவந்தது. இதை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் டெய்லர் கொலை விவகாரம்... பாக். தீவிரவாதிகள் செயலா? உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

ஜம்மு காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி இன்று கைது செய்யப்பட்டதை அடுத்து, பந்திபோராவின் நதிஹால் பகுதியில் உள்ள பயங்கரவாதியின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினர் குண்டு வீசி அழித்தனர். அதன் ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. pic.twitter.com/dLBepL8Ygn

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

மேலும் கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து மூன்று ஏகே 47 துப்பாக்கிகள், 10 மேகசீன்கள், 380 ரவுண்டு குண்டுகள், இரண்டு கிலோ வெடி பொருள் மற்றும் ஒரு சீன கையெறி குண்டு உள்ளிட்ட பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவித்தார். இதனிடையே பந்திபோராவின் நாடிஹால் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினர் அழித்தது தொடர்பான ட்ரோன் காட்சிகளை இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்து தான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!