DRDO-ல் வேலைவாய்ப்பு... 58 காலி பணியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

Published : Jun 04, 2022, 04:25 PM ISTUpdated : Jun 04, 2022, 04:26 PM IST
DRDO-ல் வேலைவாய்ப்பு... 58 காலி பணியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

சுருக்கம்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆப்டிகல் இன்ஜினியரிங் மற்றும் பிற துறைகளில் காலியாக உள்ள 58 விஞ்ஞானி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆப்டிகல் இன்ஜினியரிங் மற்றும் பிற துறைகளில் காலியாக உள்ள 58 விஞ்ஞானி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 28, 2022. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ RAC இணையதளமான rac.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிட விவரங்கள்:

விஞ்ஞானி ‘எஃப்’: 3 இடங்கள்

ஊதிய அளவு: ரூ 1,31,100/-, 7வது CPC இன் படி நிலை 13A

விஞ்ஞானி ‘இ’: 6 இடங்கள்

ஊதிய அளவு: ரூ 1,23,100/-, 7வது CPC இன் படி நிலை 13

விஞ்ஞானி ‘டி’: 15 இடங்கள்

ஊதிய அளவு: ரூ 78,800/-, 7வது CPC இன் படி நிலை 12

விஞ்ஞானி ‘சி’: 34 இடங்கள்

ஊதிய அளவு: ரூ. 67,700/-, 7வது CPC இன் படி நிலை 11

விண்ணப்பிப்பது எப்படி? 

விண்ணப்பதாரர்கள் RAC இணையதளமான rac.gov.in இல் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட தேதியில், இடத்தில் தனிப்பட்ட இறுதி நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு முற்றிலும் தனிப்பட்ட நேர்காணலில் ஒரு வேட்பாளர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். தேர்விற்கான பரிசீலனைக்கான இறுதி தனிப்பட்ட நேர்காணலில் அனைத்து காலியிடங்களுக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்களை (அதாவது 100க்கு 75) பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது, OBC மற்றும் EWS (Economically Weaker Sections) ஆண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். SC/ST/ திவ்யாங் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!