maharashtra mask mandate :மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரித்ததைத்தொடர்ந்து பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரித்ததைத்தொடர்ந்து பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா அலை 3 கட்டங்களாக வீசி மக்களை பெரிய இன்னங்களுக்கு ஆளாக்கியது. கொரோனாவில் சிக்கி ஏராளமான மக்கள் உடல்நலத்தையும், தங்கள் அன்புக்குரியவர்களையும் இழந்தனர். இந்தியாவில் 3 அலைகளாக கொரோனா, ஒமைக்ரான் மக்களை வாட்டி எடுத்தது.
மத்தியஅரசு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. நாட்டில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியதைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியது. பொது இடங்களில் மட்டும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 மாதங்கலாக கொரோனா பரவல் குறைந்து இறங்கு முகத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
அதிலும் கடந்த 3 மாதங்களுக்குப்பின் கொரோனா பரவல் மகாராஷ்டிராவில் நேற்று தினசரி பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது. இதையடுத்து கொரோனாவைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை மகாராஷ்டிரா அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த மகாராஷ்டிராவில் கொரோனா 4-வது அலை வந்துவிடக்கூடாது என்பதற்காக தொடக்கத்திலேயே தடுப்பு நடவடிக்கைளை அந்த மாநில அரசு தீவரப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா தலைமைச்செயலாளர் பிரதீப் வியாஸ் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் “ பொது இடங்களுக்கு வரும் மக்களுக்கு முகக்ககவசத்தை கட்டாயமாக்க வேண்டும். ரயில், திரையரங்குகள்,அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், வழிபாட்டுதலங்கள், பள்ளிகள், கூட்டஅரங்குகள் போன்ற மூடப்பட்ட இடங்களில் முகக்கவசம் அணிந்து தர வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களும், கொரோனா அறிகுறிகளுடன் வருவோருக்கு கரோனா பரிசோதனை நடத்த வேண்டும். பரிசோதனை அளவை 60சதவீதமாக உயர்த்த வேண்டும்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் கொரோனா பாதிப்பு அதிகரி்த்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சந்தேகத்துகுரியதாக இருந்தால் மாதிரிகள் எடுத்து, மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்
தடுப்பூசி செலுத்துவதை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும். முதல் தடுப்பூசி செலுத்தியவர்களைக் கண்டறிந்து 2-வது தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும். பூஸ்டர் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.