ஏப்ரல் 14-க்கு பிறகு சித்திரை வெயில் கொரோனா ஃப்ரை ஆயிடும்... நாமளும் ஃப்ரி ஆயிடுவோம்..?

By vinoth kumarFirst Published Mar 30, 2020, 6:13 PM IST
Highlights

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரசால் 198 உலக நாடுகளும் பீதி அடைந்துள்ளனர்.  தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிரிழப்பும், பாதிப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை 1139 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். 

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம். 32 டிகிரி வெயிலில் கொரோனா அழிந்து விடும் என மருத்துவர் நாகேஷ்வர் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரசால் 198 உலக நாடுகளும் பீதி அடைந்துள்ளனர்.  தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிரிழப்பும், பாதிப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை 1139 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். 

இந்நிலையில், கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம், இதைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஐதராபாத் மருத்துவர் நாகேஷ்வர் ரெட்டி கூறியுள்ளார். சீனாவின் வுகானில் உள்ள கடலுணவு சந்தையில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கிறது. அதைத்தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கு பரவத் தொடங்கியது. 2 மற்றும் 3 வாரங்களுக்குப் பிறகு இந்த வைரஸ் இந்தியாவுக்கு மறைமுகமாக வந்துள்ளது. சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள இந்த வைரசின் மரபணுவுக்கும், இந்தியாவில் உள்ள வைரஸ் மரபணுவுக்கும் வேறுபாடு இருக்கிறது. 'ஸ்பைக்' புரதத்தில் மாறுபாடு இருக்கிறது. அங்கு வலுவாக இருந்தது. இந்தியாவில் பலவீனமாக இருக்கிறது.

மேலும், இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். இந்த வெப்பத்திற்கு கொரோனா வைரஸ் நீண்ட நாள் இருக்காது. இதனால் நாம் அதை கட்டுப்படுத்திவிடலாம் என்று கூறியுள்ளார்.

click me!