விதவையாக வாழ விரும்பவில்லை... டைவர்ஸ் கேட்கும் நிர்பயா குற்றவாளியின் மனைவி..!

By vinoth kumarFirst Published Mar 18, 2020, 3:25 PM IST
Highlights

சட்ட நிபுணர்கள் அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்து விட்டன. ஆகவே, இனியும் தூக்கு தாமதமாக சாத்தியம் இல்லை என்று கூறிவிட்டனர்.
இந்நிலையில், அக்‌‌ஷய் குமார் சிங் என்ற தூக்குத்தண்டனை கைதியின் மனைவி புனிதா, தான் விதவையாக வாழ விரும்பவில்லை, எனவே கணவர் தூக்கிற்கு முன் விவாகரத்து பெற்றுக்கொடுங்கள் என்று பீகார்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விதவையாக வாழ விரும்பவில்லை கணவரை தூக்கிலிடும் முன்பே விவகாரத்து கொடுக்குமாறு நிர்பயா குற்றவாளிகளின் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012-ம் ஆண்டு கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ்சிங், பவன்குப்தா, வினய்சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு உள்ளிட்ட அடுத்தடுத்து மனுவால் 3 முறை தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, 4-வது முறையாக மார்ச் 20-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

ஆனால், சட்ட நிபுணர்கள் அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்து விட்டன. ஆகவே, இனியும் தூக்கு தாமதமாக சாத்தியம் இல்லை என்று கூறிவிட்டனர். இந்நிலையில், அக்‌‌ஷய் குமார் சிங் என்ற தூக்குத்தண்டனை கைதியின் மனைவி புனிதா, தான் விதவையாக வாழ விரும்பவில்லை, எனவே கணவர் தூக்கிற்கு முன் விவாகரத்து பெற்றுக்கொடுங்கள் என்று பீகார்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மார்ச் 19-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. இதுகுறித்து பேட்டியளிதத்த புனிதா என் கணவர் அப்பாவி. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக சட்ட ரீதியாக விவாகரத்து கோரியுள்ளேன் என்றார்.

click me!