இனி பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு...மத்திய அரசு அதிரடி!!

By sathish kFirst Published Jul 7, 2019, 9:19 PM IST
Highlights

ரூ.50,000க்கும் மேலான பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு விவரங்களை வழங்க வேண்டியது கட்டாயமாக இருந்துவந்த நிலையில், இனி ஆதார் விவரங்களை வழங்கினால் போதுமானது என்று வருவாய் துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார். பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் ஆதாரை ஏற்றுக்கொள்வதற்கு ஏற்ப வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டை பயன்படுத்த 2019-20 மத்திய பட்ஜெட் அறிக்கையில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் வருவாய் துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் பிடிஐ செய்தியில், ஆதாருடன் சுமார் 22 கோடி பான் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் 120 கோடிக்கும் மேலானோரிடம் ஆதார் கார்டுகள் உள்ளன. யாரேனும் ஒருவர் பான் கார்டு பெறவேண்டுமென்றால், முதலில் ஆதாரை பயன்படுத்திதான் பான் கார்டை பெற்று பயன்படுத்த முடியும்.

ஆகையால், பான் தேவைப்படும் இடங்களில் ஆதாரை அனுமதிப்பது மக்களுக்கு மிகப்பெரிய சவுகரியத்தை கொடுக்கும். வங்கிக் கணக்குகளில் ரூ.50,000க்கும் மேல் பணத்தை டெபாசிட் செய்யவும் ஆதாரை பயன்படுத்தலாம். சிலர் பான் கார்டை பயன்படுத்த விரும்புவதால் பான் கார்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும். எப்படியிருந்தாலும், ஒவ்வொரு பான் கார்டும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கிறது எனதெரிவித்தார்.

click me!