கரீபியன் பிராந்தியத்தில் உள்ள தீவு நாடான டொமினிகா அந்நாட்டின் உயரிய தேசிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
கரீபியன் பிராந்தியத்தில் உள்ள தீவு நாடான டொமினிகா அந்நாட்டின் உயரிய தேசிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின்போது டொமினிகாவிற்கு பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்புகளையும், இந்தியாவிற்கும் டொமினிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கிலும் காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கவுள்ளது.
undefined
நவம்பர் 19 முதல் 21, 2024 வரை கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற உள்ள இந்தியா-காரிகாம் உச்சிமாநாட்டின்போது டொமினிகா காமன்வெல்த் தலைவர் சில்வானி பர்டன் இந்த விருதை மோடிக்கு வழங்குவார்.
இந்த 1 ரூபாய் இருந்தா போதும்... 10 லட்சம் ரூபாய் உங்களைத் தேடி வரும்!
இதுகுறித்து டொமினிகா பிரதமர் ஸ்கெரிட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிப்ரவரி 2021 இல் 70,000 அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை டொமினிகாவுக்கு பிரதமர் மோடி வழங்கினார். இது டொமினிகா தனது கரீபியன் அண்டை நாடுகளுக்கும் ஆதரவு வழங்க உதவியது" என்று கூறியுள்ளார்.
"பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் டொமினிகாவுக்கு இந்தியா அளித்த ஆதரவையும், உலக அளவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் முயற்சிகள் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டொமினிகா மற்றும் கரீபியன் பிராந்தியத்துடன் பிரதமர் மோடி கொண்டிருக்கும் ஒற்றுமைக்காக டொமினிகா செலுத்தும் நன்றியின் வெளிப்பாடே இந்த விருது என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்கெரிட் கூறியுள்ளார்.
ரயில்களில உள்ள M1 பெட்டியில் என்ன ஸ்பெஷல் இருக்கு?